Monday, January 28, 2013

சித்தர்களின் ரசவாதம்

சித்தர்களின் ரசவாதம் :

          சித்தர்களின் ரசவாதம் என்பது தரம் குறைந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றுவது. அதாவது இரும்பு, செம்பு, வெள்ளி மற்றும் வெள்ளியம்,காரியம் போன்ற உலோகத்தை தங்கமாக மாற்றுவதே ஆகும். மேலும் இரும்பை செம்பாக மாற்றுவது, செம்பை வெள்ளியாக மாற்றுவது, வெள்ளியை தங்கமாக மாற்றுவது போன்றவைகளும் ரசவதமாகும். இத்தகைய செயல்களை சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலும் மற்ற பகுதியில் வாழ்ந்த சித்தர்கள் என்பவர்கள் செய்ததாக அவர்களுடைய நூல் ஏடுகளில் காணமுடிகிறது. இத்தகைய ரசவாத செயல்களை நாமும் செய்யலாமே என்று இன்றைய நாட்களில் அதிகம் பேர் இந்த ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். இதிலே முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த ஆராய்ச்சி சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் இது நம் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அணைத்து நாடுகளிலும் இந்த ரசவாத ஆராய்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெற்றி யாரும் பெறவில்லை. அதற்கான காரணங்களையும் பார்க்க இயலும்.

ரசவாதம் தொடக்கம் :

ரசவாதத்தின் தொடக்கம் என்பது தமிழகத்தில்தான் தோன்றியது என பலரும் நினைகின்றனர். ஆனால் எகிப்துதான் ரசவாதத்தின் தொடக்கம் ஆகும். ரசவாதத்தின் தாய்நாடு என்றுகூட சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் தங்கம் நிறைந்த தேசமான  எகிப்திடம் அடிமையில் இருந்து வெளியேறும் போது அநேக தங்கத்தை கொள்ளையடித்ததாக கூறுகிறது. ரசவாதத்தில் இந்திய இரண்டாவது இடத்தை பெறுகிறது. ஆனால் இப்போது ஆய்வு செய்து பார்த்தால் இந்தியா முதல் இடத்தை பெறுகின்ற அளவுக்கு அதிகமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருகின்றன. அதற்க்கு காரணம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களும், அவர்கள் எழுதி வைத்த கட்டுகதைக்களும்தான் காரணம்.

ரசவாதம் தொடக்கமும் அதன் காலங்களும்  :

 1. எகிப்திய ரசவாதம் (கிமு 5000 - கிமு 400). ரசவாதத்தின் தொடக்கம்.
 2. இந்திய ரசவாதம் (கிமு 1200 - தற்போது காலமும் சேர்த்து).
 3. கிரேக்க ரசவாதம் (கிமு 332 - கிபி 642).
 4. சீன ரசவாதம் (கிபி 142).
 5. இஸ்லாமிய ரசவாதம் (கிபி 700 - கிபி 1400)
 6. இஸ்லாமிய ரசவாதம் (கிபி 800 - தற்போது காலமும் சேர்த்து) நிறையின்    அடிப்படையில்
 7.ஐரோப்பிய ரசவாதம் (கிபி 1300 - தற்போது காலமும் சேர்த்து)
 8. ஐரோப்பிய ரசாயனம் (கிபி 1661 - தற்போது காலமும் சேர்த்து)

இந்த எட்டாவதாக சொல்லப்பட்ட ஐரோப்பிய ரசாயனம் என்பது அதற்கு முன்பு உள்ள அணைத்து ரசவாத கொள்கைகளுக்கும் ஆப்பு வைத்தது என்றே சொல்லவேண்டும். ஏன்னெனில் மதிப்பிற்குரிய அறிஞன் லாவசியர் அவர்கள்  ரசாயனக்கொள்கை கொண்டு தனிமங்களை பற்றி ஒரு சிறந்த கோட்பாட்டை  கொடுத்தார். அது முந்திய ரசவாத கொள்கைகளை பாதித்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் மதிப்பிற்குரிய அறிஞன் டால்டன் அவர்கள் தன்னுடைய அணுக்கொள்கைகளில் தனமங்களின் அணுக்களை பற்றியும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை பற்றியும்  சொல்லும் போது பழமையான எகிப்திய, இந்திய, கிரேக்க, சீன மற்றும் இஸ்லாமிய அணைத்து  ரசவாதங்களுக்கும் முடிவு கட்டியது. அவைகளின் போலியான ரசவாத முகத்திரை கிழிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களின் இரசவாதமும் சேர்ந்து  அடங்கும். டால்டனின் அணுக்கொள்கையனது  "சிவந்ததெல்லாம் செம்பு என்றும், பழுத்ததெல்லாம் தங்கம் என்றும்" சொல்கின்ற சித்தர்களின் ரசவாத கொள்கை இன்றைய நாட்களில் வெற்றி பெறாத ஒன்று என்பதை உறுதி செய்தது.

ரசவாதம் உருவாக காரணம் :


ரசவாதம் உருவாக காரணத்தை அறியும் முன் சில நடந்த சம்பவங்களை அறிந்து கொள்வது நல்லது. அலுமினியத்தில் ஒரு காமெடி...! ஒரு காலத்தில் அறிய உலோகம் என்றால் அது அலுமினியம்தான். அப்பப்பா என்ன ஒரு மௌசு இந்த அலுமினியத்திற்கு. புவியின் மேற்பகுதியில் மிக பொதுவாக காணப்படும் தனிமங்களில் ஒன்று அலுமினியம். அதன் தாதுப் பொருட்களில் இருந்து அதனை பிரிப்பது அந்த காலத்தில் கடினமாக இருந்தது. தாதுப் பொருட்களில் இருந்து அலுமினியத்தை பிரிக்கும் செலவு அதிகம். அனால் உற்பத்தி குறைவு. இதனால் தங்கத்தை காட்டிலும் அலுமினியத்தின் விலை அதிகம். கீழே உள்ள மூன்று சம்பவங்களையும் சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

1. 1855 ஆம் ஆண்டில் பிரான்சில் இடம்பெற்ற பன்னாட்டுக் கண்காட்சியில் பிரான்சின் அரச அணிகலன்களுடன் அலுமினியக்கட்டிகள் மதிப்புமிக்கப் பொருளாக வைக்கப்பட்டிருந்தது.

2. மூன்றாம் நெப்போலியன் மிக முக்கியமான விருந்தினர்களுக்கு உணவருந்தவதற்க்கு அலுமினியத்தினால் செய்யப்பட்ட கரண்டி ஆகியவை கொடுக்கப்பட்டது. அதே நேரத்துல முக்கியத்துவம் குறைந்தவர்களுக்கு வெள்ளிக் கரண்டி வழங்கப்பட்டது.

3. வாசிங்க்டன் நினைவு சின்னத்தின் பட்டை கூம்பு வடிவ உச்சி 100 அவுன்ஸ் எடை கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டது. இந்த நினைவு சின்னம் உருவாக்கப்பட்ட காலத்தில் அலுமினியத்தின்  விலையும் வெள்ளியின் விளையும் ஒன்றாக இருந்தது.

1886 ஆம் ஆண்டில் அலுமினியத்தைப் பிரித்து எடுப்பதற்க்கான புதிய முறையைக் கண்டுபிடித்த பின்னர் அலுமினியத்தின் விலை நிரந்தரமாகவே வீழ்ச்சியடைந்தது. மீண்டும் சொல்கிறேன் அலுமினியத்தின் விலை நிரந்தரமாகவே வீழ்ச்சியடைந்தது இன்று வரை.

அலுமினியத்திற்கு ஏற்ப்பட்ட நிலைமை தங்கத்திற்கு வரவில்லை. அதனாலே தங்கத்தின் தேவையும் அதன் மதிப்பும் அதிகரித்தது. இதன் மூலம்  ரசவாதம் என்னும் பித்தலாட்டம் உருவானது.

இந்த ரசவாதம் என்னும் பித்தலாட்டம் மனிதனின் தேவையும், பேராசையும் கூட.  சித்தர்கள் வாழ்ந்த அந்த காலத்திலும்  மதிப்புமிக்க பொருளாகவே இருந்தது. மேலும் பொருள்களை வாங்க, விற்க இந்த தங்கத்தையே பயன்படுத்தி உள்ளனர். சித்தர்கள் அதிக நேரம் தியானத்தில் இருப்பதால், தங்களால் ஒரு இடத்தில் இருந்து வேலை செய்ய பிழைக்க முடியாது என்பதினால்... தங்களுக்கு தெரிந்த இந்த டுப்பக்கூர் ரசவாதத்தை கொண்டு தங்கமாக செய்து விற்று தங்கள் ஜீவனத்தை காப்பற்றிக்கொண்டார்கள், ஒரு சில சித்தர்களை தவிர...


சித்தர்களின் ரசவாத்தின் உண்மையான நோக்கம் :

ரசவாத தேடல் தொடர்கிறது :




தொடரும்....