தங்கத்தை பற்றி ஒரு செய்தி

தங்கத்தை பற்றி ஒரு செய்தி :

ஒரு அவுன்ஸ் தங்கத்தில் 5 மைகிரான் தடிமனும் 80 மீட்டர் நீளமுள்ளதுமான இழை செய்ய முடியும். தங்கம் அழகானதும் வலிமை உள்ளதும் ஆகும். உலகில் இருக்ககூடிய உலோகங்களில் அரிதானது, அழகானது, மின்கடத்தியனதும், வலிமையானதும், எளிதில் உடைந்து போகாமல் மிகவும் வளைந்து கொடுக்கக் கூடியதும் என தங்கத்தை பல அம்சங்களை கொண்டதும்மான உலோகம்தான் தங்கம் ஆகும். தங்கத்தை விட உயர்ந்த மிகவும் அரிதாக விலை மதிப்பு மிக்க உலோகம் பிளாட்டினம் இருந்தாலும் மக்கள் அதிகமாக விரும்புவது மஞ்சள் வர்ணம் பொருந்திய தங்கமே ஆகும். தங்கம் அதிக வலிமையும், அதிகம் வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளதால் ஆபரண உற்பத்தியில் அதிகம் விரும்பப்படும் உலோகம்மாக தங்கம் முதலிடத்தில் உள்ளது.



தங்கமானது இயற்கையில் ஆற்று படுக்கைகளிலும் பாறைகளிலும், நிலத்தின் அடிபகுதியிலும் கனிம்மங்களாக காணப்படுகின்றன. உலகில் இருக்ககூடிய ஆயிரத்திற்கு அதிகமான தங்கச்சுரங்கங்களில் பெரும்பாலானவை தென்னாப்ரிக்காவில் இருப்பதுடன் அந்த நாடு தங்க உற்பத்திலும் முதலிடம் வகிக்கின்றது. மேலும் இன்றைய காலத்திலும் தங்கமானது பணத்தின் வலுவினை நிர்ணையதுள்ளது. 


No comments: