நியூட்டனின் ரசவாத முயற்சி

நியூட்டன் ரசவாதத்தை ரகசியம் :



தங்கத்தின் தேவையே ரசவாதத்தின் தொடக்கம் ஆகும். அகத்தியர் வாழ்ந்த  ஆரம்ப காலத்தில்  மதிப்பிற்குரிய அறிஞன் டால்டன் அவர்களின் அணுக்கொள்கை இல்லை. இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும். அதே நேரத்தில் பழைய கற்கால நாகரீகத்தில் மக்கள்  பல்வேறு தாதுக்களில் இருந்து அவற்றின் உலோகங்கள் பிரித்தெடுக்கும் முறை கண்டறிந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

பொதுவாக சர் ஐசக் நியூட்டன் என்றால் பதினேழாம் நூற்றாண்டின் வாழ்ந்த கணிதமேதை என்றும், அறிவியல் மேதை என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு ரசவாதி என்பது யாருக்கும் தெரியாது. கி.பி 1727 ஆம் ஆண்டில் சர் ஐசக் நியூட்டன் மரணத்திற்கு பின்பு தி ராயல் சொசைடி நியூட்டன் உடைய மில்லியன் எழுத்துகளை அச்சிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது . ஏனெனில் இருபதாம் நூற்றாண்டில் சர் ஐசக் நியூட்டனின் அநேக கண்டுபிடிப்புகள் ஆவணங்களாக  கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் மூலம் பல அறிஞர்கள் சர் ஐசக் நியூட்டனை அவர்  ஒரு முதன்மை ரசவாதி என ஒப்புக்கொண்டனர். மேலும் அதன் மூலம் சர் ஐசக் நியூட்டனின் ஒளியின் உத்வேகம் மற்றும் ஈர்ப்பு கோட்பாடு பற்றி நியூட்டனின் விதிகள் போன்றவை அவரது ரசவாத படைப்புகளில் இருந்தே வந்தது என்றும் தெளிவாக தெரிந்தது. ஜே. டபிள்யூ. வி சுல்லிவன் சர் ஐசக் நியூட்டனை பற்றி சொல்லும் போது ரசவாத அறிவு என்னும்  வெளிச்சத்தில் உறதி உள்ள வாழ்கை வாழ்ந்ததாக சொல்கிறார். சர் ஆதர் எட்டிண்டன் என்பவர் சர் ஐசக் நியூட்டனை பற்றி சொல்லும் போது நியூட்டன் ரசவாதத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், அதற்காக அதிக நேரத்தை செலவழித்ததாகவும், அதற்காக ஏராளமான  அறிவியல் சோதனைகள் அதிகம் செய்தார் என்றும் சொல்கிறார். 

ரசவாத ஆய்வில் இருக்கும் போதோ அல்லது மற்ற வேலைகளிலோ அவர் அநேக நாட்கள் ஒரு பைத்தியம் பிடித்தது போன்று திரிந்தார் சொல்லப்படுகிறது. இறுதில் அநேகர் அவர்க்கு பத்தியமே பிடித்திவிட்டது என்றும் சொல்லத்தொடங்கினர். ஆனால் சில நாட்களுக்கு பின்பு அவர் இயல்பான வாழ்க்கை வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. சிலர் நியூட்டன் தன் ஆய்வகத்தை பல நாட்கள் பூட்டி கொண்டு, அவர் இறுதியாக ஈயத்தை தங்கமாக மாற்றி வெற்றி பெற்றார் என்றும் சொல்கின்றனர். ஒரு வேலை அவர் வெற்றி பெற்றிருந்தால் இன்று தங்கத்தை தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இருக்காதே.


இறுதி நாட்கள் வரையிலும் தன்னுடைய ரசவாத ஆராய்சிகளை பற்றி மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் ரகசியமாக வைத்திருந்தார் என்பதனால்  அவருடைய ஆராய்ச்சி தோற்றுப்போனது என்ற முடிவுக்கு வரமுடியாது எனவும் கருத்துகள் எழுகின்றன. என்னை கேட்டல் தங்கம் செய்யும் ஆசை  என்பது ஒரு விஷ பாம்புக்கு சமம். அது யாரைனாலும் கடிக்கும். அது மேதை என்றும் பார்க்காது பேதை  என்றும் பார்க்காது. மொத்தத்தில் தங்கம் செய்யும் ஆசை பேதைகளை மட்டும்மல்ல மேதைகளையும் முட்டாளாக்கும் என்பது தெளிவு.

சித்தர்களிடம் காணப்பட்ட முரண்பாடுகள் :

அகத்தியர் அடித்த அந்தர்பல்டி : 

தொடரும்....

No comments: